ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலையில் 7 பஞ்சலோக சிலைகள் மீட்பு... திருடிய 4 பேர் கைது

திருவண்ணாமலையில் 7 பஞ்சலோக சிலைகள் மீட்பு... திருடிய 4 பேர் கைது

கைதான 4 பேர்

கைதான 4 பேர்

Tiruvannamalai | தானிப்பாடி பகுதியில் உள்ள குகை கோவிலில் இருந்த 200 ஆண்டு காலம் பழமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலை கொள்ளையான வழக்கில் 4 பேரை போலீசார் kஐது செய்துள்ளனர். ஏழு பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதிகளில் ஏராளமான குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். குருமன்ஸ் இன மக்கள் குலதெய்வமாக சித்தப்படையார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். சித்தப்படையார், வீரபத்திர சுவாமி, சிவன் பார்வதி போன்ற இரண்டடி உயரம் உள்ள 10 சிலைகளை வைத்து இவர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகள் அனைத்தும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஐம்பொன் சிலைகளை மலமஞ்சனூர் அருகே உள்ள மலை குகையில் வைத்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மலை குகையில் உள்ள  ஐம்பொன் சிலைகளை எடுத்து தென்பெண்ணையாற்றில் நீராட்டி பின்னர் இந்த மலை குகையில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.

இதனிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்  குருமன்ஸ் இன மக்கள் பாறை குகையில் வைத்திருந்த சுவாமி சிலைகளை எடுக்க சென்ற போது அங்கு சிலைகளை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கு முன் இந்த சிலைகள் இரண்டு முறை திருடப்பட்டது என்றும் குறிப்பாக ஒரு முறை திருடி வெளியே வரும் போது அவர்கள் கண் பார்வை இழந்ததாகவும், மற்றொரு முறை சிலைகளை எடுத்துச் சென்ற கும்பல் எடுத்துச் செல்ல முடியாமல் அருகில் உள்ள குளத்தில் போட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மலை குகையில் இருந்து திருடப்பட்ட சிலைகள் வாணாபுரம் அருகே உள்ள நூக்கம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்த காவல்துறையினர் அங்கே சென்று அந்த சிலைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் திருடப்பட்ட இரண்டு சிலைகள் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் எடுத்துச் சென்றதாக தெரிந்ததை அடுத்து அங்கு சென்ற தானிப்பாடி காவல் துறையினர் அந்த சிலைகளை மீட்டனர்.

இதனை அடுத்து இந்த சிலைகளை திருடியதாக நூக்காம்பாடி பகுதியை சேர்ந்த சதீஷ், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மலமஞ்சனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலைகளை விற்று தருவதாக கூறி இரண்டு சிலைகளை எடுத்துக்கொண்டு சென்ற மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களை தானிப்பாடி காவல் துறையினர் கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணாபுரம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து குடிபோதையில் சிலைகள் குறித்து பேசி உள்ளனர். வாணாபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் இவர்கள் பேசுவதை உற்று நோக்கி கவனித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சதீஷ் மற்றும் மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள மணிகண்டன் வீட்டில் திருடு போன ஏழு சிலைகள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 சிலையை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஐயப்பனையும் வாணாபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டு சிலை மீட்டனர்.

Also see... புதுச்சேரியில் 2 வீடுகள் உடைத்து கொள்ளை...

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஐம்பொன் சிலையை காவல்துறையினர் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சிலையை திருடிய அவர்களே குடிபோதையில் சிலைகள் பற்றி உளறியதால் திருடிய சம்பவம் அம்பலமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Idol Theft, Thiruvannamalai