ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

தீபத்திருவிழா 2ம் நாள் தெப்பல் உற்சவ விழா... ஸ்ரீபராசக்தியம்மன் ஐய்யங்குளத்தில் பவனி... பக்தர்கள் தரிசனம்!

தீபத்திருவிழா 2ம் நாள் தெப்பல் உற்சவ விழா... ஸ்ரீபராசக்தியம்மன் ஐய்யங்குளத்தில் பவனி... பக்தர்கள் தரிசனம்!

உண்ணாமலையம்மன் தெப்பல் உற்சவம்

உண்ணாமலையம்மன் தெப்பல் உற்சவம்

tiruvannamalai | பராசக்தியம்மன் தெப்பலில் மூன்று முறை ஐய்யங்குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 6 ம் தேதி மாலை 6 மணியளவில் 2668 உயரம் உள்ள அண்ணாமலையார் தீபமலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது. இதனை தொடர்ந்து நேற்று தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக முதல் தெப்பல் உற்சவ விழா நடைபெற்றது.

இன்று காலையில் அண்ணாமலையார் உண்ணாமுலைம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கிரிவலம் வருவதன் மகிமையை உணர்த்தும் விதமாக 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்தனர்.

தெப்பல் உற்சவ விழா...

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை ஐய்யங்குளத் தெருவில் உள்ள ஐய்யங்குளத்தில் ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பலில் எழுந்தருளினார்.

Also see... வெளியே வராதீங்க.. அத்தியாவசிய பொருட்களை வாங்கி வச்சுகோங்க.. தமிழ்நாடு அரசு அலெர்ட்..

பின்னர் தீபாராதனைகள் நடைபெற்ற பராசக்தியம்மன் தெப்பலில் மூன்று முறை ஐய்யங்குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பராசக்தி அம்மனை வழிபட்டனர்.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai