ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்!

பஞ்சமூர்த்திகள்

பஞ்சமூர்த்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளில், பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வண்ண வண்ண மாலைகளால் அலங்காரம் செய்து செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினார்.

Also see... கார்த்திகை தீபம்.. 6 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் - ஆட்சியர் உத்தரவு

இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு கற்பூர தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai