ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2ம் நாள்... தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த சந்திரசேகரர்..!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2ம் நாள்... தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த சந்திரசேகரர்..!

சந்திரசேகரர்

சந்திரசேகரர்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவான இன்று ஐந்து குடையுடன் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து சந்திரசேகரர் காட்சி தந்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று திருக்கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதேபோல் சந்திரசேகரருக்கு வெண்பட்டு உடுத்தி, கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி, வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர் ஐந்து குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Also see...கார்த்திகை தீபத்திருவிழா...சுவாமிமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

அதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai