முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / மீண்டும் பேனர் பிரச்சனை: அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பலத்த காயம்..!

மீண்டும் பேனர் பிரச்சனை: அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பலத்த காயம்..!

அதிமுக பேனர் சரிந்து விபத்து

அதிமுக பேனர் சரிந்து விபத்து

அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் பாபு அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வரவேற்பதற்காக தேவிகாபுரம் போளூர் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் அதிமுக கொடிகள் கட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Polur

போளூர் அருகே அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பலகை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது விழுந்ததில் அவர் பலத்த படுகாயமடைந்து போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மொடையூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் பாபுவின் மகள் அனிதப்பிரியாக்கும் பார்த்திபன் என்கின்ற மணமகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவிற்கு போளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளார்.

இதனால், அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் பாபு அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வரவேற்பதற்காக தேவிகாபுரம் போளூர் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் அதிமுக கொடிகள் கட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ALSO READ | மது அருந்தி வந்த தம்பி.. தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் - காஞ்சிபுரத்தை அதிரவைத்த சம்பவம்

இந்நிலையில் தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தவேலின் மனைவி ரம்யா(29) என்பவர் தேவிகாபுரத்தில் இருந்து போளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, மொடையூர் கிராமத்தில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர், ரம்யா மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரம்யாவை அக்கம்பக்கத்தின் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: மோகன்ராஜ், ஆரணி

First published:

Tags: ADMK, Banner case, Tiruvannamalai