ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

ஆரணியில் ஹோட்டலின் கூரையை பிரித்து இறங்கி திருடும் 2 பெண்கள் - சிசிடிவி காட்சிகள் வைரல்

ஆரணியில் ஹோட்டலின் கூரையை பிரித்து இறங்கி திருடும் 2 பெண்கள் - சிசிடிவி காட்சிகள் வைரல்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

ஆரணியில் அசைவ உணவகத்தில் 2 மர்ம பெண்கள் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்று திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி பதிவை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் சாந்தம் என்கின்ற அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.நேற்று வழக்கம் போல் இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டி சென்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் அடையாளம் தெரியாதது போல் முகமூடி அணிந்து கூரையை பிரித்துக் கொண்டு உணவகத்திற்கு உள்ளே இறங்கி பணப்பெட்டியை திறந்து அதில் உள்ள சுமார் 4,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து உணவு உரிமையாளர் வழக்கம்போல் இன்று காலை உணவகத்தை திறந்து பார்த்த போது பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனார்.

இதைடுயத்து உடனடியாக ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவை பரிசோதனை செய்தனர். அதில்,  இரண்டு பெண்கள் மாஸ்க் அணிந்து கொண்டு கல்லாப்பெட்டியில் பணம் திருடுவது பதிவாகியுள்ளது. ஆரணி கிராமிய காவல்துறையினர் உணவகத்தின் சிசிடிவி பதிவை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆரணி மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட கோவில்களில் மர்ம நபர்களால் கோவில் உண்டியலை உடைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகியது. இத்தகைய சிசிடிவி பதிவுகளை வைத்தும் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறுவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: CCTV, Tiruvanamalai