Home /News /tiruvannamalai /

ஊக்கால் முகப்பருவை அகற்றிய ஆசிரியர்? 10ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கி உயிரிழப்பு.. பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்..

ஊக்கால் முகப்பருவை அகற்றிய ஆசிரியர்? 10ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கி உயிரிழப்பு.. பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்..

உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன் சிவகாசி

உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன் சிவகாசி

Thiruvannamalai | 10ம் வகுப்பு மாணவன் முகபருவினில் இறந்தானா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    10ம் வகுப்பு மாணவன் சிவகாசியின் முகத்தில் முகப்பரு கட்டி  இருந்துள்ளாதாகவும் இதனால் மாணவன் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே மாணவன் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணம் மாணவனின் ஆசிரியர் தான் என பெற்றோரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலையில் அரசவெளி என்ற மலைக்கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நம்மியம்பட்டு கிராமத்தை  சேர்ந்த செவத்தான் என்பவரின் மகன் சிவகாசி (வயது 15)  10ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவன் சிவகாசியின் முகத்தில் முகப்பரு கட்டி  இருந்துள்ளாதாகவும் இதனால் மாணவன் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது..

    இதனால் கடந்த 28.06.22 தேதி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை மகாலட்சுமி மாணவனின் முகத்தில் புடவைக்கு அணியும் பின்னால் குத்தியதாகவும் இதனால் முகம் வீக்கம் அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.. மேலும் ஆசிரியர்  சிவகாசியின் தந்தைக்கு இரவு 9 மணியளவில் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சிவகாசியின் முகம் வீங்கி  உடல்நிலை மோசக  உள்ளது‌ என்று தெரிவித்துள்ளார்..

    Also Read : வேறு வழியில்லை.. போதைக்கு அடிமையான மகனை சங்கிலி போட்டு கட்டிய பெற்றோர்


    மேலும் சிவாகாசியின் தந்தை செவத்தன் பள்ளிக்கு சென்று மகனை பார்த்து  தந்தை செவத்தன் அதிர்ச்சி அடைந்தார்...
    இதனைத்தொடர்ந்து  சிவகாசியின் தந்தை மாணவனை அழைத்து சென்றுள்ளார். பின்னர்  நம்மியம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவனுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  அதன் பின்னர் மாணவனின் முகம் மோசமடைந்து மிகவும் பாதிக்கபட்டு மாணவனால் நடக்கமுடியாமல் படுத்தபடுக்கையாக இருந்துள்ளான்..

    உடனடியாக பெற்றோர் மாணவனை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவன் சிவகாசியை சேர்த்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.. இதனையொடுத்து  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மாணவன்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மாணவன் சிவகாசி  30.06.22 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து  குறித்து  ஜமனாமரத்தூர் காவல்நிலையத்தில் மாணவனின் தந்தை செவத்தான் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    10ம் வகுப்பு மாணவன் முகபருவினில் இறந்தானா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதைப்பற்றி ஆசிரியர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, மாணவனுக்கு வெயில் நாட்களில் வரும் கட்டி போன்று இருந்தது மாணவனின் முகம் அதிகமாக வீங்கி மாணவன் முகத்திலிருந்து நீர் வடிய ஆரம்பத்தை பார்த்து நான் துடைத்து மட்டும்தான் விட்டேன் மத்தப்படியாக எதுவும் செய்யவில்லை என்று கூறினார்..

    மேலும் மாணவனின் முகம் வீக்கம் அதிகமாகி கொண்டிருப்பதால் அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டேன் பின்பு அன்று மாலை சிவகாசியின் அண்ணன் வந்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். மாணவன் வீட்டுக்கு செல்லும்போது நன்றாக இருந்ததாக ஆசிரியர் மகாலட்சுமி தெரிவித்தார்..
    பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறினார்..

    ஆரணி செய்தியாளர் ம.மோகன்ராஜ்
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: School student, Tiruvannamalai

    அடுத்த செய்தி