ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

தாசில்தார் எனக் கூறி மூதாட்டிகளிடம் நகைகள் அபேஸ்.. சிக்கிய கில்லாடி ஸ்கூட்டி ராணி..!

தாசில்தார் எனக் கூறி மூதாட்டிகளிடம் நகைகள் அபேஸ்.. சிக்கிய கில்லாடி ஸ்கூட்டி ராணி..!

தீபா புஷ்பா ராணி

தீபா புஷ்பா ராணி

ஆடு, மாடுகள், மேய்க்கும் வயதான மூதாட்டிகளிடம் தான் ஒரு தாசில்தார் என்றும் முதியோர் உதவி தொகை வாங்கித் தருவதாகவும் நம்பவைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் தீபா புஷ்பா ராணி (வயது 35). இவர் கடந்த ஆறு மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம், பென்னாலூர்பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக ஆடு, மாடுகள் மேய்க்கும் வயதான மூதாட்டிகளிடம் தான் ஒரு தாசில்தார் என்றும் உங்களுக்கு முதியோர் உதவி தொகை வாங்கித் தருவதாகவும் பேசி  நம்பவைத்துள்ளார். மேலும் அதற்கு போட்டோ எடுக்க வேண்டும் அதற்காக நகைகளை கழட்டி கொடுங்கள் என்று நவீன முறையில் வழிப்பறி செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று மூதாட்டிகளிடம் இவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தீபா புஷ்பா ராணியை பிடிக்க ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சாரதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 120 கண்காணிக் கேமரா காட்சிகளை  ஆய்வு செய்து, ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனையில் நவீன முறையில் வழிப்பறையில் ஈடுபட்ட தீபா புஷ்பா ராணியை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து சுமார் 8 சவரன் தங்க நகைகள் காவல்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளுர்)

First published:

Tags: Crime News, Gold Robbery, Robbery, Thiruvallur