நேபாளம் நாட்டிந்கு கைப்பந்து விளையாட சென்ற தமிழக வீரர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(27). வாலிபால் விளையாட்டு வீரரான இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள உசேன் மெமோரியல் என்ற தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேபாள நாட்டின் போக்ரா நகரத்தில் உள்ள ரங்கசாலா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள ஆகாஷ் சென்றிருந்தார்.
ஞாயிற்று கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று வாலிபால் விளையாட்டின் போது மைதானத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். மயங்கி விழுந்த ஆகாஷை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஆகாஷ் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
ஆகாஷ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும் மகன் உடலை விரைவாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் கைவண்டு கிராமத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஓட்டப் போட்டிகள் பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். எனவே ஆகாஷ் மரணம் அடைந்ததை அறிந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆகாஷின் தந்தை நேரு தாசன் தடகள வீரர் என்பதும், அவர் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாலிபால் விளையாட்டு வீரர் ஆகாஷ் உயிரிழந்தது ஒட்டுமொத்த விளையாட்டு கிராமமான கைவண்டூரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Sports Player