ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

வாரிசு டிக்கெட்.. வாட்ஸ் அப்பில் ட்ரைன் - க்யூர் ஆர் கோட் வைத்து டிக்கெட்டை தூக்கிய மர்மநபர்கள்

வாரிசு டிக்கெட்.. வாட்ஸ் அப்பில் ட்ரைன் - க்யூர் ஆர் கோட் வைத்து டிக்கெட்டை தூக்கிய மர்மநபர்கள்

வாரிசு டிக்கெட்

வாரிசு டிக்கெட்

Varisu Pongal : திருத்தணியில் நூதன மோசடியில் ஈடுபட்டு வார்சு டிக்கெட் வாங்கியவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என விஜய் ரசிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்த க்யூ ஆர் கோட் பயன்படுத்தி மர்ம நபர் 3 டிக்கெட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள துர்கா மற்றும் துர்கா மினி திரையரங்கில் வாரிசு மற்றும் துணிவு படம் நாளை ரீலீஸ் ஆகிறது. இதனால் ரசிகர்கள் நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருத்தணியைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் நாளை (11.01.23) மாலை 6.30 மணி காட்சிக்காக தான் வாங்கிய 3 நபர்களுக்கான வாரிசு பட டிக்கெட்டை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்காக அந்த ரசிகர் தியேட்டருக்கு சென்று பார்த்த போது, இந்த டிக்கெட்டை வேறு யாரோ வாங்கி விட்டதாக தெரிவித்தனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகர் விசாரித்த போது, அந்த ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டில் இருந்த க்யூ ஆர் கோடை நூதன முறையில் பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்தி 3 டிக்கெட் வாங்கியது தெரியவந்தது.

இளைஞர் புக் செய்த டிக்கெட்டை வாங்கியது யார் என்ற விவரம் தெரியவில்லை. நாளை மாலை 6.30 மணிக்கு சினிமா ஆரம்பிக்கும் போது தான் தெரியவரும்  என தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நூதன மோசடியில்  ஈடுபட்டவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என விஜய் ரசிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் : சசிக்குமார் (திருத்தணி)

First published:

Tags: Cinema Ticket, Local News, Tamil News, Thiruvallur, Thunivu, Ticket booking, Varisu