ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

இந்தியாவின் அரசியல் பேரிடர் ஆர்.எஸ்.எஸ், பாஜக-தான் - திருமாவளவன்!

இந்தியாவின் அரசியல் பேரிடர் ஆர்.எஸ்.எஸ், பாஜக-தான் - திருமாவளவன்!

திருமாவளவன்

திருமாவளவன்

Thiruvallur | எங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்ய காலூன்ற துடிக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தற்போது ஆர்எஸ்எஸ் தமிழகத்தை குறி வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur) | Tamil Nadu

  தமிழக அரசு மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற  இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலாவுதீன் பஷீரா தம்பதி திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

  தொடர்ந்து பேசிய அவர், அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை அறிவித்துள்ளோம். பல்வேறு பணிச்சுமைகள் இருந்தாலும் கருத்தியல் ரீதியாக நாம் அரசியலில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது இந்தியாவில் அரசியல் பேரிடர் என்றால், அது பாஜகவும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னால் மிகை ஆகாது. அவர்கள் வளர, வளர நாடு பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாஜகவும் ஆர் எஸ் எஸ் ம் வலிமை பெற்று வரும்போது நாடு மிகப்பெரிய பேரிடரை சந்திக்கும். அது பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் பேரிடரை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

  மேலும், பாஜக என்பது சாதாரண அரசியல் கட்சி அல்ல ; தேர்தல் கட்சியும் அல்ல; அது கோல்வாக்கரின் நச்சு சித்தாந்தத்தில் உருவான ஒரு கட்சி. இந்த தீய சக்திகளின் அரசியல் தேசத்தின் அழிவுக்கு காரணமாக முடியும். அந்த நச்சு அரசியல் தற்போது இந்தியாவில் மத வெறுப்பையும் அரசியல் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்கு நான் வரும் வழியில் அண்ணா சிலை காவி துணியால் மூடப்பட்டுள்ளது. அவரது கையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திய ஆ. ராசா உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற  கீழ்த்தரமான செயல்களை பாஜகவை தவிர வேற எந்த அரசியல் கட்சியினரும் செய்யமாட்டார்கள்.

  எங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்ய காலூன்ற துடிக்கிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும். தற்போது ஆர்எஸ்எஸ் தமிழகத்தை குறி வைத்துள்ளது. எனவே இது போன்ற தீய சக்திகளை தமிழக அரசு கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். அவர்களே தங்களது வீடு கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது. தற்போது இங்கு நடைபெறுவதெல்லாம் இங்குள்ள பாஜக மாநில தலைவர் செயல்பாட்டால் அல்ல. டெல்லியில் இருந்து அமித்ஷா மூலம் இயக்கப்படுகிறது எனவும் பேசினார்.

  ALSO READ | அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை - காரணம் என்ன?

  தொடர்ந்து பேசிய அவர், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 100 பேர் நகரத்தில் 100 பேர் பேரூராட்சியில் 100 பேர் என அனைத்து பகுதிகளிலும் மாநிலத்தில் 350 இடங்களில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த வேண்டும். கையில் சமூக நீதி கொடியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏந்தி பேரணியாக செல்ல வேண்டும். பேரணியின்போது, ’’வேரறுப்போம் வேரறுப்போம் சனாதனத்தை வேரறுப்போம் .. வென்றெடுப்போம் வென்றடுப்போம் ஜனநாயகத்தை வென்றெடுப்போம்..  காத்திடுவோம் காத்திடுவோம் சமூக நீதியை காத்திடுவோம்’’ என முழக்கமிட்டபடி செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Thiruvallur, Thol. Thirumavalavan, VCK