ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

புழல் சிறையில் மோதலில் ஈடுபட்ட பெண் கைதிகள்... விலக்க சென்ற வார்டனுக்கு அடி, உதை!

புழல் சிறையில் மோதலில் ஈடுபட்ட பெண் கைதிகள்... விலக்க சென்ற வார்டனுக்கு அடி, உதை!

மாதிரி படம்

மாதிரி படம்

puzhal prison | தகராறில் ஈடுபட்ட பெண் கைதிகளை விலக்கிவிட முயற்சித்த வார்டனை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puzhal | Thiruvallur (Tiruvallur)

புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் திடீரென மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள், விசாரணை பெண் கைதிகள், தண்டனை பெண் கைதிகள் என 250க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த மோனிகா சவுத் மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த சீனதாண்டா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை கண்ட பெண் வார்டன் தகராறில் ஈடுபட்ட பெண் கைதிகளை விலக்கிவிட முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், இருவரும் ஒன்றாக சேர்ந்து வார்டனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

இதில் காயமடைந்த வார்டன் கோமளா, தற்போது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கண்ணியப்பன், திருவள்ளூர்.

First published:

Tags: Fight, Local News, Puzhal, Puzhal jail, Puzhal Prison