ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - பயத்தில் தீக்குளித்த 16 வயது சிறுமி.. திருவள்ளூரில் பயங்கரம்..!

பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - பயத்தில் தீக்குளித்த 16 வயது சிறுமி.. திருவள்ளூரில் பயங்கரம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, தான் தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தை நினைவு திரும்பியவுடன் இன்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur) | Tamil Nadu

  திருவள்ளூர் அருகே 17 வயது சிறுமிக்கு 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததால் பயத்தில், சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தை சேர்ந்த 17  வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக கடந்த 23ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அந்த மாந்தோப்பில் இருந்த 5 இளைஞர்கள் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

  தொடர்ந்து அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி தங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி, வீட்டில் பயத்துடனே இருந்துள்ளார். மறுநாள் காலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுமி மீது தண்ணீர் ஊற்றி அணைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, தான் தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தை நினைவு திரும்பியவுடன் இன்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையறிந்த தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து 5 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி- திருவள்ளூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Child Abuse, Crime News, Sexual abuse, Sexual harrasment, Suicide attempt