ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

குளித்த கையோடு சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் அரட்டை.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

குளித்த கையோடு சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் அரட்டை.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

உயிரிழந்தவர்

உயிரிழந்தவர்

வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur)

  திருவள்ளூர் அருகே வீட்டில் குளித்துவிட்டு வந்து சார்ஜரோடு  செல்போனில் பேசிய போது எதிர்பாராத விதமாக  மின்சாரம் பாய்ந்து மத்திய அரசு பாதுகாப்பு துறை  ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை பகுதியை சேர்ந்த  பால்பாண்டி(59), ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி ஈ  தொழிற்சாலையில்  பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவடி ஜே.பி எஸ்டேட்டில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.

  அந்த வீட்டில் மறு சிறு அமைப்பு பணிகள் முடிவுற்ற  வர்ணம் பூசும் பணி செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை அன்று பெயிண்ட் வேலை செய்ய வேலையாட்கள் யாரும் வராத நிலையில் பால்பாண்டி  தனியாக வீட்டில் வர்ணம் பூசிவந்துள்ளார்.

  ஞாயிற்றுக்கிழமை மாலை தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றவர் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, ஈர கையுடன் தன்னுடைய செல்போனில் யாருடனோ பேசியுள்ளார்.

  இதையும் படிங்க | செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல்... திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம்

  அப்போது எதிர்பாராத விதமாக  சார்ஜர் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக  வீட்டின் அருகே உள்ள பாஸ்கர் என்பவர் கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

  வீட்டின் முதல் மாடியில் சுவற்றில் சாய்ந்த படி அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த பால்பாண்டியன் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காகஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Death, Thiruvallur