ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

லிப்ட் கேட்ட காதலி.. கத்தியை நீட்டிய காதலன் - திருவள்ளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட காதல்ஜோடி கைது

லிப்ட் கேட்ட காதலி.. கத்தியை நீட்டிய காதலன் - திருவள்ளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட காதல்ஜோடி கைது

காதல் ஜோடி கைது

காதல் ஜோடி கைது

Thiruvallur Crime News : புழல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் மாவட்டம்,புழலில் இரவில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறியில் ஈடுபட்ட காதலன் காதலி கைது.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் நேற்று முன்தினம்  இரவு சொந்த வேலைக்காக சென்னை புழல் விநாயகபுரம் பகுதியில் இருந்து புழல் வரை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புழல் கதிர்வேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் லிப்ட் கேட்பது போல் அவரது வாகனத்தை மடக்கினார்.

கணேஷ் குமாரும் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் உதவிகேட்பதால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளார். அந்தப்பெண் பேசிக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை சென்றுள்ளார். அந்த இளம்பெண்ணும் உடனே மாயமானார்.

Also Read: திருடுவதற்கு பஸ்சில் மட்டுமே போகும் கொள்ளையன்.. சிக்கும் பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - பலே திருடன் கைது

இந்த சம்பவத்தால் பதற்றமடைந்த கணேஷ்குமார் அருகில் உள்ள புழல் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் விளக்கினார்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார்  புழல் பகுதியை சேர்ந்த வாணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய காதலன் அபினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இதுபோல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து புழல் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Local News, Lovers, Robbery, Tamil News, Thiruvallur