ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

மகன் இறந்த சோகத்தில் பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..! அம்பத்தூரில் சோகம்!

மகன் இறந்த சோகத்தில் பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..! அம்பத்தூரில் சோகம்!

தம்பதியினர் தற்கொலை

தம்பதியினர் தற்கொலை

மகன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது நினைவாகவே வாழ்ந்து வந்த பெற்றோர், துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Tamil Nadu | Ambattur

  திருவள்ளூர் அருகே மகன் இறந்த சோகத்தில் இருந்த தாய், தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஆயிலச்சேரி பகுதியை சேர்ந்த மோனிகா தனது கணவருடன் வசித்து வருகிறார். தந்தை தனசேகர் (55) மற்றும் தாயார் பூங்கொடி (50) கருணாகரசேரியில் விவசாயம் செய்து வந்தனர்.

  மோனிகாவின் சகோதரர் ஆவடி தனியார் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் மகனை இழந்த துக்கத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

  இந்த நிலையில், மோனிகா வழக்கம் போல் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து, மோனிகா அவர்களை காண நேரில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  ALSO READ | இன்ஸ்டாகிராமில் காதல் வலை.. பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

  இதனிடையே கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  முதற்கட்ட விசாரனையில் மகன் இறந்து ஓராண்டு ஆகும் நிலையில் துக்கம் தாங்க முடியாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொள்ளி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : கன்னியப்பன், திருவள்ளூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Suicide, Thiruvallur