ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

செய்வினை இருக்கு உசுருக்கே ஆபத்து.. பரிகாரம் செய்வதாக நகையுடன் மாயமான இளைஞர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

செய்வினை இருக்கு உசுருக்கே ஆபத்து.. பரிகாரம் செய்வதாக நகையுடன் மாயமான இளைஞர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

பாதிக்கப்பட்ட பெண்

பாதிக்கப்பட்ட பெண்

Thiruvallur News: திருவள்ளூரில் பரிகாரம் செய்வதாக கூறி இளைஞர் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur), India

  திருவள்ளூரில் செய்வினை நீக்குவதாக கூறி நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

  திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி வயது (60).  உடல்நலக்குறைவு காரணமாக கால் செயல் இழந்த நிலையில் இருந்துள்ளார்.  இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் மூட்டு வலி, முதுகு வலி, குழந்தையின்மைக்கு மருந்து கொடுப்பதாக கூறியுள்ளார். தனக்கு கால் வரவில்லை  நடக்க கூட முடியவில்லை எதாவது மருந்து இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

  பார்த்தசாரதி வீட்டுக்கு வந்த இளைஞர் இந்த வீட்டுக்கு யாரோ செய்வினை வெச்சு இருக்காங்க எனக் கூறியுள்ளார். அதனை உடனே சரிசெய்யவில்லை என்ற உயிருக்கே ஆபத்து எனக் கூறியுள்ளார். பரிகாரம் எதாவது இருக்கா எனக் கேட்க பூஜை செய்தால் சரியாகப்போகும் எனக் கூறியுள்ளார்.

  இப்போதே பூஜை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பூஜை செய்ய என்ன வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.  பூஜைக்கு இந்த வீட்டில் இருப்பவர்களின் நகை தேவை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கோயிலுக்கு சென்று பூஜை செய்து வருவதாக அந்த இளைஞன் கூறியுள்ளான். அவரது பேச்சைக் கேட்டு பார்த்தசாரதியின் மகள் மேகனா தான் அணிந்திருந்த நான்கு சவரன் நகையை கழற்றி கொடுத்துள்ளார்.

  Also Read:  `ஸ்லோ பாய்சன்’ கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்.. காட்டிக்கொடுத்த வாட்ஸ் அப் சாட் - விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்

  பூஜை செய்வதாக கூறி நகையை வாங்கிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் கோயிலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது  கோயிலில் யாரும் இல்லாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதனையடுத்து பார்த்தசாரதி குடும்பத்தினர்  பென்னாலூர்  பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் நகையை மோசடியாக பறித்துச் சென்ற நபரை  தொடர்ந்து போலீஸார் தேடி வருகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Gold, Local News, Tamil News, Thiruvallur