ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பள்ளி விடுமுறை.. திருவள்ளூர் கலெக்டரின் ட்வீட்டால் குழம்பிய மக்கள்.. எங்க ஊருக்கு யாருங்க லீவு விடுவா பொதுமக்கள் கேள்வி

பள்ளி விடுமுறை.. திருவள்ளூர் கலெக்டரின் ட்வீட்டால் குழம்பிய மக்கள்.. எங்க ஊருக்கு யாருங்க லீவு விடுவா பொதுமக்கள் கேள்வி

திருவள்ளூரில் பள்ளி விடுமுறை

திருவள்ளூரில் பள்ளி விடுமுறை

திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தாலுக்காக்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியரே அறிவித்துவிட்டார் என திருவள்ளூர் ஆட்சியர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் ஆகிய நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி தவிர்த்து மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. எனவே, பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய  5 வட்டங்களில் விடுமுறை இல்லை என்றும் திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய நான்கு வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

  சென்னை மாவட்டத்தில் அடங்கிய திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தாலுக்காக்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியரே அறிவித்துவிட்டார் என திருவள்ளூர் ஆட்சி டாக்டர் ஆர்பி ஜான் வர்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

  இதையும் படிங்க: இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

  திருவொற்றியூர், மாதவரம் அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய தாலுகாக்கள் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் வருவதால் இதற்கான விளக்கத்தை கல்வித்துறை அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

  Published by:Kannan V
  First published:

  Tags: Heavy Rains, School Holiday, School Leave, Thiruvallur