Home /News /tiruvallur /

குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பள்ளி வாகனம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்

குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பள்ளி வாகனம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்

திருத்தணி நகராட்சியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் தகுந்த முறையில் மூடாத காரணத்தினால், பள்ளி வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 50 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர்.

    திருத்தணி நகராட்சிக்கு  உட்பட்ட காந்தி சாலை அருகே 1500 பள்ளி மாணவர்கள் பயிலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த வழியாக திருத்தணி அரசு பொது மருத்துவமனை மற்றும் கலால் காவல் நிலையம், ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் என அனைத்தும் உள்ளது.  இப்படி முக்கியமான சந்திப்பான காந்தி சாலை பகுதியில், திருத்தணி நகராட்சி ரூபாய் 116 கோடி மதிப்பிலான குடிநீர் பணிக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் புதைக்கும் பணியை செய்து வருகிறது.

    இதில் ஆந்திர மாநில ஜேசிபி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகளின் ஜேசிபி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது, இவர்கள் தகுந்த முறையில் பள்ளம் தோண்டும் இடத்தை சரியான முறையில் மடுவதில்லை. அப்படி முறையாக மூடாததால் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த பள்ளங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை இந்த பகுதி வழியாக பள்ளிக்கு 50 மாணவர்களை தனியார் பள்ளி வாகனம்  ஏற்றிச் சென்றது. அந்த வாகனத்தில் ஆசிரியர்களும் இருந்துள்ளனர், இந்த வாகனம் இராதாகிருஷ்ணன் அரசு பள்ளி அருகில் வரும்போது திடீரென குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகனம் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது,

    அப்போது அதிர்ஷ்டவசமாக டிரைவர் சாமர்த்தியத்தால் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வேனில் இருந்த 50 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர், இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தனியார் பள்ளி வாகனம் ஜே.சி.பி  மூலம் மீட்கப்பட்டது.

    Also see... ஜெயலலிதா ஓட்டுநர் கனராஜின் அண்ணன் கைது...

    திருத்தணி நகராட்சியில் இதுபோல் நகராட்சி குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அடிக்கடி வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் பள்ளம் தோண்டும் பகுதியில் சரியான முறையில் மூடுவதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருத்தணி நகராட்சி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Accident, School Bus

    அடுத்த செய்தி