ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

இந்திரனையே சிறை பிடித்த முருகன்.. சந்திரகிரகணத்துக்கு நடை சாத்தப்படாத திருத்தணி கோயில்!

இந்திரனையே சிறை பிடித்த முருகன்.. சந்திரகிரகணத்துக்கு நடை சாத்தப்படாத திருத்தணி கோயில்!

திருத்தணி முருகன்

திருத்தணி முருகன்

lunar eclipse 2022 Murugan temple | திருத்தணி முருகன் கோயில் நடை இன்று திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் மூடப்படாது என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruttani (Thiruttani), India

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருத்தலமாகும். இன்று நவம்பர்-8, செவ்வாய்க்கிழமை, மாலை ஏற்படும் சந்திர கிரகணம் தமிழகத்தில் உள்ள 98 சதவீத திருக்கோயில்கள் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் ஏற்படும் அந்த மாலை வேளையில் மூடப்படும் திருக்கோயில்களில் பிரபல கோயில்களும் அனைத்தும் அடங்கும். ஆனால் இதில் திருத்தணி கோவில் அடங்காது.

  இது குறித்து திருத்தணி கோவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”  திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  நவம்பர்-8, செவ்வாய்க்கிழமை, முருகருக்கு உகந்த நாள் என்பதால் காலை-5 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்யலாம். மேலும் சந்திர கிரகணம் ஏற்படும் மாலை வேளையில் மாலை-5 மணிக்கு. செவ்வாய்க்கிழமை மூலவர் முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் மட்டும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடைபெறாது.

  மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம்  செவ்வாய்க்கிழமை இரவு-9 மணிக்கு மேல் அபிஷேகம் மூலவர் முருகப்பெருமானுக்கு செய்யப்படும். மேலும் செவ்வாய்க்கிழமை மாலை-5 மணிக்கு மேல் 2-மணி நேரம் கழித்து அபிஷேகம் செய்யப்படும். அந்த 2- மணி நேரத்தில் திருக்கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தி தண்ணீரால் சுத்தப்படுத்தி இரவு பூஜை நடைபெறும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

  Also see... சந்திரகிரகணம் 2022: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எவை?

  ' isDesktop="true" id="832673" youtubeid="HrJus5duKVg" category="tiruvallur">

  ஆகையால் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருக்கோயில் இன்று காலை-5 மணி முதல், இரவு-10:00 மணி வரை மூடப்படாது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தினர் திருக்கோயில் தலைமை குருக்கள் உடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு இதனை தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Lunar eclipse, Murugan temple, Tiruttani Constituency