சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி, 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் அனைவரும் மீண்டும் கார் மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் திருத்தணியை அடுத்த தாசிரெட்டி கண்டிகை அருகே கார் வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.
சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார், அனைவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், கெடுவாய்ப்பாக தனியார் நிறுவன ஊழியரின் 8 வயது மகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மீதமுள்ள 7 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car accident, Children death