ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

4 தலைமுறை சொந்தங்கள்... 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்.. உறவினர்கள் பங்கேற்ற கொண்டாட்டம்!

4 தலைமுறை சொந்தங்கள்... 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்.. உறவினர்கள் பங்கேற்ற கொண்டாட்டம்!

திருத்தணி முதியவரின் 100வது பிறந்தநாள்

திருத்தணி முதியவரின் 100வது பிறந்தநாள்

மகன்கள், பேரன், பேத்திகள், கொல்லு பேரன், பேத்திகள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து பிறந்தநாளை கொண்டாடினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruttani (Thiruttani) | Thiruvallur

திருத்தணி அருகே முதியவர் ஒருவர் தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை சேர்ந்தவர் நல்லான் விநாயகம். நெசவு தொழிலாளியான இவருக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர்.

85 ஆண்டுகள் வரை நெசவுத் தொழில் செய்து வந்த நல்லான் விநாயகம் முதுமையில் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில்  நல்லான் விநாயகம் தனது 100வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை சிறப்பாக கொண்டாட அவர்களது உறவினர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க | கடும் பனிமூட்டத்தால் ரயில்கள் தாமதம்.! படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பயணிகள்!

அந்த வகையில் அவர்களது 5 மகன்கள், 16 பேரன், பேத்திகள்,  பேரன்கள் பெற்றெடுத்த கொள்ளு பேரன் பேத்திகள் 15 பேர் உட்பட  100க்கும் மேற்ப்பட்ட உறவினர்கள் ஒன்று கூடி  நல்லான் விநாயகத்தின் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அசைவ உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி.

First published:

Tags: Birthday, Local News, Thiruvallur