முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோயிலில் ரூ1.24 கோடி உண்டியல் காணிக்கை வசூல்..!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ1.24 கோடி உண்டியல் காணிக்கை வசூல்..!

Tiruttani  | திருத்தணி முருகன் கோயிலில் ஒரு கோடியே 24 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்...

Tiruttani | திருத்தணி முருகன் கோயிலில் ஒரு கோடியே 24 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்...

Tiruttani | திருத்தணி முருகன் கோயிலில் ஒரு கோடியே 24 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்...

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruttani (Thiruttani), India

திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் உகந்த ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்து வருகை தந்து மலை கோயிலில் உள்ள உற்சவர் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

அப்படி வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள்,. இவற்றை எண்ணுவதற்கு இந்து அறநிலைத்துறை இடம் இருந்து அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயா அவர்கள் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், ஆகியோர்களை கொண்டு மலை கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.

Also see...திருமணம் தள்ளிப்போகிறதா? புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போடுங்கள்

அதன் விவரம், பணம் ரூபாய்-1,24,91,368,  தங்கம்-1,060. கிராம் வெள்ளி-11,700. கிராம் ஆகியவை கிடைக்கப் பெற்றதாக திருக்கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி

First published:

Tags: Murugan temple, Tiruttani Constituency