ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

அரை கிலோ தங்கம்.. 5 கிலோ வெள்ளி.. திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை!

அரை கிலோ தங்கம்.. 5 கிலோ வெள்ளி.. திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை!

திருத்தணி உண்டியல்

திருத்தணி உண்டியல்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் ரொக்கம் வசூல் ஆனது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruttani (Thiruttani), India

  முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுவாமி தரிசனம் செய்து மலைக் கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் காணிக்கை செலுத்துவது பக்தர்களின் வழக்கம். பக்தர்கள் செலுத்திய காணிக்கை ஒவ்வொரு மாதமும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுகிறது.

  கந்தசஷ்டி விழா முடிந்துள்ள நிலையில் கடந்த 27 நாட்களின் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக் கோயில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  திருக்கோயில்  துணை ஆணையர் விஜயா முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்  பங்கேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

  Also see... இனி கனமழைதான்.. இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

  இதில் ரொக்கமாக 89 லட்சம் 03 ஆயிரத்து 193 ரூபாய்,665 கிராம் தங்கம், 5,557 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக திருக்கோயி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Murugan temple, Tiruttani Constituency