முகப்பு /செய்தி /திருவள்ளூர் / கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்களுக்கு இடையே மோதல்... மதுபோதையில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..!

கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்களுக்கு இடையே மோதல்... மதுபோதையில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..!

போட்டியில் மோதிக்கொள்ளும் இளைஞர்கள்

போட்டியில் மோதிக்கொள்ளும் இளைஞர்கள்

Thiruvallur village Cricket Fight | இரவு மதுபோதையில் மீண்டும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதால் அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்கள் இடையே மோதல் வெடித்த நிலையில், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பக்கத்து கிராமமான சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் முற்றியதில் இரவில் இருதரப்பும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியே போர்க்களமானது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தாமல் உள்ளதாக இரு தரப்பு மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இது  குறித்து புகார் வரப்பெற்றும்  நடவடிக்கை  எடுக்காமல் இருதரப்பையும் அழைத்து  சமரசம் செய்து கூட்டத்தை  கலைத்தனர்.

First published:

Tags: Crime News, Fight, Local News, Thiruvallur