ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

WATCH - பேண்ட் போடலை.. ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்.. சாலையில் கதறி அழுத லாரி ஓட்டுநர்!

WATCH - பேண்ட் போடலை.. ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்.. சாலையில் கதறி அழுத லாரி ஓட்டுநர்!

கதறி அழுத லாரி ஓட்டுநர்

கதறி அழுத லாரி ஓட்டுநர்

வாகன சோதனையில் ஈடுபட்ட டிராபிக் போலீசார், லாரி ஓட்டுநரிடம் ஏன் பேண்ட் போடவில்லை என கேட்டு அபராதம் விதித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur) | Tamil Nadu

  திருவள்ளூரில் பேண்ட் போடாததற்கு அபராதம் விதித்த போலீசாரிடம் லாரி ஒட்டுநர் கதறி அழுகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  திருவள்ளூரில் டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்த போலீசார், பேண்ட் போடவில்லையா என கேட்டு ரூ.500 அபராதம் கட்டும் படி லாரி ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.

  புதிய விதிமுறைகளின் உள்ளதாக கூறி உடனடியாக ரூ.500 அபராதம் கட்டும்படி வற்புறுத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் தான் 10 இடங்களுக்கு சென்றாலும் தனக்கு ஒரு நாள் ரூ.500 கிடைப்பதே கஷ்டம் என கதறி அழுத அவர், தன்னால் அபராதம் கட்ட முடியாது என போலீசாரிடம் கெஞ்சி அழுதுள்ளார்.

  அதற்கு அந்த போலீசார், நீயா கட்டுற, லாரியின் ஓனர் தானே கட்டுவார் போடா என ஆவேசமாக கத்தினார். இதை கேட்ட அந்த லாரி ஓட்டுநர் சாலையிலேயே நின்ற படி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Thiruvallur, Viral Video