முகப்பு /செய்தி /திருவள்ளூர் / டாஸ்மாக் கடையை துளையிட்டு திருட்டு.. மது அருந்தியபோது கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

டாஸ்மாக் கடையை துளையிட்டு திருட்டு.. மது அருந்தியபோது கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

டாஸ்மாக்கில் நுழைந்த மர்மநபர்கள்

டாஸ்மாக்கில் நுழைந்த மர்மநபர்கள்

கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே மதுபிரியர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். 

  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

டாஸ்மாக் கடையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்ததோடு அல்லாமல் கடையிலேயே அமர்ந்து மதுவை அருந்திகொண்டிருந்த கொள்ளையர்களை  காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவில் கவரைப்பேட்டை போலீசார் ரோந்து பணியின் போது கடை அருகே சென்று பார்த்தனர். அப்போது கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே மர்ம நபர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது.

துளையின் வெளியே இருந்து வரும் மதுபிரியர்

இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் மதுபாட்டில்களையும், திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மதுபிரியரை மடக்கிப் பிடித்த போலீஸ்

இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்றவர்கள் சாவகாசமாக மது அருந்திய போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

top videos

    செய்தியாளர் : பார்த்தசாரதி

    First published:

    Tags: Tasmac, Thiruvallur