ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

தேங்கி நிற்கும் மழைநீர்.. தெர்மாகோல் படகில் ஏறி பள்ளி செல்லும் மாணவர்கள்.. திருவள்ளூரில் ஆபத்து பயணம்!

தேங்கி நிற்கும் மழைநீர்.. தெர்மாகோல் படகில் ஏறி பள்ளி செல்லும் மாணவர்கள்.. திருவள்ளூரில் ஆபத்து பயணம்!

திருவள்ளூர்

திருவள்ளூர்

கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur)

  திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தெர்மாகோல் மூலம் பள்ளிக்கு சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி, தமிழகத்தில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த நிலையில், இன்று பள்ளிகள் நடைபெறுவதால் மாணவர்கள் தெர்மகோல் படகு மூலம் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றனர்.

  இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ALSO READ | இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு..!

  இந்த வீடியோவில் அப்பகுதி தீவு போல காட்சியளிக்கிறது. அதில், 4 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் கை துடுப்புகள் மூலம் தண்ணீரில் தெர்மாகோலான படகை ஓட்டி பள்ளிக்கு செல்கின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Heavy rain, School students, Thiruvallur, Viral Video