திருவள்ளூர் அருகே பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி இறந்த விவகாரத்தில் உண்மை தன்மை வேண்டும் என்று கூறி, அவரது உறவினர்கள் திருத்தணி அருகே உள்ள மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் கிராமத்தில் சாலை மறியலில் போராட்டங்களில் நேற்று ஈடுபட்டனர்.
மாணவியின் உடற்கூறாய்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் சிறப்பு அனுமதியுடன் தொடங்கி நடைபெற்றது. மருத்துவமனை டீன் அரசி தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
மாணவியின் உடல் கூராய்வு முடிந்த பின்பு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவரது கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருப்பதுடன், சாலையில் திரண்டுள்ளனர். மேலும் மாணவியின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் தற்போது வீட்டில் இருக்கிறார். மாணவியின் வீட்டு முன்பு மாணவியின் உறவினர்கள் அதிகளவு கூடியுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆணி விஜயா தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர், ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோர்கள் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவி பயின்ற பள்ளிக்கு இன்று இரண்டாவது நாளாகவும் விடுமுறை விடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் திருத்தணியில் இருந்து மாணவியரின் சொந்த ஊர் வரும் வழியில், வெளி ஊர் நபர்கள் உள்ளே வராத அளவிற்கு 12 இடங்களில் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவியின் சொந்த ஊரில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் மாணவியின் சொந்த ஊர் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு பேரூராட்சி, பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, என 50க்கும் மேற்பட்ட ஊருக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை பகுதி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Must Read : தனியார் சுண்ணாம்பு கல் குவாரியினால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்
இதனால், இந்த பகுதி வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பேருந்து சேவைகள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Police, School student, Sucide, Thiruvallur