ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருவள்ளூரில் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்த மாணவர்கள்.. பாலப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூரில் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்த மாணவர்கள்.. பாலப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மாணவர்களின் வீடியோ

மாணவர்களின் வீடியோ

Tiruvallur news : திருவள்ளூர் அருகே ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பாலத்தின் குறுக்கே பயணித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

  திருவள்ளூர் அருகே ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பாலத்தின் குறுக்கே பயணித்த காட்சிகள் வெளியான நிலையில் ஒரே நாளில் ஊராட்சித் தலைவர் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

  திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், முழுமை பெறாத பாலத்தின் மீது ஏணியை வைத்து ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணித்தனர்.

  திருவள்ளூர் மாவட்டம் விடையூர் - கலியனூரை இணைக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 3 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் கடந்த 5 ஆண்டுகளாக பாலப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

  கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கலியனூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள், விடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முழுமையாக கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது, ஏணி மூலம் ஏறிச் சென்றனர்.

  ALSO READ | செய்வினை இருக்கு உசுருக்கே ஆபத்து.. பரிகாரம் செய்வதாக நகையுடன் மாயமான இளைஞர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

  இந்நிலையில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த ஏணியை போலீசார் அகற்றினர். இதையடுத்து விடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, தனியார் வாகனத்தில் பள்ளி மாணவர்களை கலியனூருக்கு அனுப்பி வைத்தார். பாலப்பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Local News, Tamil News, Thiruvallur, Viral Video