முகப்பு /செய்தி /திருவள்ளூர் / சாலையில் நடந்து சென்ற இருவரை சரமாரியாக வெட்டி சென்ற மர்மகும்பல்.. பலியான இளைஞர்

சாலையில் நடந்து சென்ற இருவரை சரமாரியாக வெட்டி சென்ற மர்மகும்பல்.. பலியான இளைஞர்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Thiruvallur murder | சாலையில் நண்பர்கள் இருவரும் பேசி கொண்டே நடந்து சென்ற போது மர்மகும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டி சென்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puzhal, India

புழலில் சாலையில் நடந்து சென்ற நண்பர்களை மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து கொண்டிருந்த போது, திடீரென வந்த மர்ம கும்ப கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது. அப்போது தடுக்க முயன்ற நண்பர் விஜயையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிதம் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, புழல்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Puzhal