ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை ஸ்கூட்டரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் நாசர்

மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை ஸ்கூட்டரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் நாசர்

அமைச்சர் நாசர் ஆய்வு

அமைச்சர் நாசர் ஆய்வு

மழைநீர் கால்வாய் பணிகள் 80% நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 30 நாட்களில் 20% பணிகள் முடிவடைந்துவிடும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை இருசக்கர வாகனத்தில் சென்றவாறு அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகர், ஸ்ரீ ராம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழை பாதிப்பு பகுதிகளை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்து தடுப்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்..

  அதன் அடிப்படையில் வசந்தம் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா நகர் பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு அனைத்து பகுதிகளையும் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளோடு நேரில்  ஆய்வு செய்தார்.

  இதையும் படிங்க: இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்- தமிழகத்தில் அமைகிறது

  இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில்

  ஆவடி மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துதை சார்பில்

  வசந்தம் நகர் பிரதானசாலை, ஸ்ரீராம் நகர், அண்ணா நகர் பிரதான சாலை மற்றும் ஆவடி-பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 80% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 30 நாட்களில் 20% பணிகள் முடிவடைந்துவிடும் என தெரிவித்தார். இனி வரும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் சென்றுவிடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

  செய்தியாளர்: கன்னியப்பன் - திருவள்ளூர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Minister, Thiruvallur