முகப்பு /செய்தி /திருவள்ளூர் / உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து கொண்டு வடிவேல் பாணியில் கொள்ளையடித்த திருடன்!

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து கொண்டு வடிவேல் பாணியில் கொள்ளையடித்த திருடன்!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ. 10,000 பணம் திருடப்பட்டு இருப்பதும் சில்லறையாக இருந்த 40 ரூபாய் மட்டும் உண்டிலேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் பழைய கொள்ளையர்கள் பாணியில் ஆடை இல்லாமல் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து கோயிலில் திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி  பகுதியில் பிரபல சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறக்கப்படும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று, கோயிலின் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் கோயிலை திறப்பதற்காக வந்த பூசாரி, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ. 10,000 பணம் திருடப்பட்டு இருப்பதும் சில்லறையாக இருந்த 40 ரூபாயை மட்டும் உண்டிலேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது,

இதனை அடுத்து பூசாரி அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவிலில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதையும் வாசிக்க: கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? போலீஸ் விசாரணை சொல்வது என்ன? 

அதில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்  உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு  அரை நிர்வாணமாக  கோயில் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. பின்னர் கோவில் உண்டியலில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற காட்சியும் அதில் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Temple, Thiruvallur, Vadivelu