முகப்பு /செய்தி /திருவள்ளூர் / வாஸ்து சரியில்லை.. கட்டிய வீட்டை இடித்தவர் இடிபாட்டில் சிக்கி பலியான சோகம்!

வாஸ்து சரியில்லை.. கட்டிய வீட்டை இடித்தவர் இடிபாட்டில் சிக்கி பலியான சோகம்!

உயிரிழந்த செல்வம்

உயிரிழந்த செல்வம்

Thiruvallur Death | வாஸ்து பிரகாரம் வீடு சரியில்லை என கூறியதால் வீட்டை இடித்து மாற்றி கட்ட முயற்சித்த நபரே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வாஸ்து படி வீட்டை இடித்து கட்ட முயன்றவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி மேலாண்டை தெருவைச் சேர்ந்தவர் 47 வயதான செல்வம். வாஸ்து பிரகாரம் வீட்டை சீரமைக்க ஏற்கனவே கட்டியிருந்த வீட்டை கடப்பரை கொண்டு இடித்தார். வீட்டின் ஒருபகுதியை இடித்த போது மேலே இருந்த சிலாப் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சசிக்குமார், திருவள்ளூர்.

First published:

Tags: Death, Local News, Thiruvallur