ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு..!

இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தலைமறைவாக உள்ள ராஜுவை தேடி வரும் நிலையில் கொலைக்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur) |

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், மேட்டு தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (36), அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சங்கீதா(18), கடந்த நான்கு வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக  சில மாதங்களாக  தாய் அம்சவள்ளியுடன் வசித்து வந்தார்.

  இந்த நிலையில் இன்று காலை அம்சவள்ளி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டும் காலில் அணிந்திருந்த கொலுசு மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இதையும் வாசிக்க: தமிழகத்தில் 17ஆம் தேதிவரை தொடர்மழை : வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட்

  இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து சென்று இறந்து போன சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த அம்சவள்ளி, ராஜு (38) என்பவருடன் கடந்த நான்கு வருடங்களாக தொடர்பில் இருந்து வந்த நிலையில் இவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இவரது மகள் சங்கீதா தாயுடன் வசித்து வந்த நிலையில் அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த வீட்டிற்கு இரண்டு சாவி இருந்த நிலையில் இன்று வழக்கம்போல் அம்சவள்ளி வேலைக்கு சென்று விட்டார். சாவி வைத்திருந்த ராஜு வீட்டிற்கு வந்து அவரது சங்கீதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு, பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.

  மேலும் இந்த சம்பவம் குறித்து அம்சவள்ளியிடம் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ராஜுவை தேடி வரும் நிலையில் கொலைக்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Crime News