திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 2018 மற்றும் 19ம் கல்வி ஆண்டில் பொன்னேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் படித்தார். முதலாம் ஆண்டு படிக்கும்போதே, லோகேஷ் தன்னுள் பெண்ணுக்கான இயல்பு இருப்பதை அறிந்து உள்ளார். இதையடுத்து பெண்ணை போன்றே உடை அணிய தொடங்கிய அவர், பெண்ணை போன்றே தன்னை மாற்றிகொண்டார். இதனால் இரண்டாம் ஆண்டில் கல்லூரியில் படிக்க நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் 2020 -21 மற்றும் 2021-22ம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக கல்லூரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து 2022- 2023 கல்வியாண்டில் ஆவது பட்டப்படிப்பு படிக்க வேண்டிய லோகேஷ் திருநங்கையாக மாறியதால் தனது பெயரை ஓவியா என பெயர் மாற்றம் செய்து கொண்டு பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் சேர விண்ணப்பித்தார்.
ஆனால் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர நிர்ணயம் செய்த வயதை விட ஐந்து நாள் அதிகமாக இருந்ததால் சேர்க்கைக்கான வயது இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டார். இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கிசை நேரில் சந்தித்து கடந்த பதினெட்டாம் தேதி ஓவியா கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதை பரிசீலனை செய்து தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் ஒப்புதலுடன் திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப்படிப்பு பயில மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார். அதன் பெயரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதவியல் படிக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Also see... தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு...
அந்த கல்லூரியில் சேர்வதற்கான ஆணையினை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் வேலூர் எஸ் காவேரி அம்மாள் முன்னிலையில் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர, கல்லூரி கல்வி இயக்குனர் காவேரி அம்மாள் ஆகியோருக்கு திருநங்கை ஓவியா நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.