முகப்பு /செய்தி /திருவள்ளூர் / ”10 ஆண்டுகளாக சிரமப்படுகிறோம்!” - சாலையை சீரமைக்க அய்யப்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை!

”10 ஆண்டுகளாக சிரமப்படுகிறோம்!” - சாலையை சீரமைக்க அய்யப்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை!

சீர் செய்யபடமால் கிடக்கும் சாலை

சீர் செய்யபடமால் கிடக்கும் சாலை

Ayyapakkam Road Damage | பல முறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டம், அய்யப்பாக்கம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள்  குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமி. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். அன்றாடம் இருசக்கர வாகனத்தில் பயணித்து பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் இவர், சாலைகள் மேடு பள்ளங்களுடன் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவதாக கூறுகிறார்.

இது குறித்து வேதனை தெரிவித்த லட்சுமி, வாகனம் ஓட்டுவது என் வேலையின் முக்கிய தேவை என்றும் டெலிவரிக்கு செல்லும் போது அதிக பார்சல்களை எடுத்து செல்வேன். அப்போது சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் மேடு, பள்ளங்கள் இருப்பது தெரிவதில்லை என்றார்.

மழைக்காலங்களிலும் மிகவும் சிரமத்துடன் சாலைகளில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தப் பகுதியில் சாலைகளை சீரமைத்தால் நன்றாக இருக்கும் என  லட்சுமி கோரிக்கை விடுத்தார். அய்யப்பாக்கம் ஊராட்சியில் 1000க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் போடப்படவில்லை.  சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாத பகுதியாக அய்யப்பாக்கம் ஊராட்சி உள்ளதாக என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல முறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை உடன் தெரிவிக்கின்றனர். அய்யப்பாக்கம் பகுதி மக்கள். இப்பகுதியில் உடனடியாக சாலை அமைக்கக்கூடிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thiruvallur