நாகதோஷம் நள்ளிரவு பூஜையில் பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி மர்ம மரணத்தில் சிக்கிய சாமியார் - நடந்தது என்ன?
நாகதோஷம் நள்ளிரவு பூஜையில் பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி மர்ம மரணத்தில் சிக்கிய சாமியார் - நடந்தது என்ன?
மாணவி மரணம் சாமியார் கைது
CRIME : சாமியார் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டியதால் கல்லூரி மாணவி விஷமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் அருகே ஆசிரமத்திற்கு சென்ற கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் சாமியார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. சாமியார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் .
திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் முனுசாமியிடம் அழைத்து சென்றுள்ளனர். மாணவியின் பெற்றோர்களிடம் மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக பொய் சொல்லி அடிக்கடி நள்ளிரவு பூஜைக்கு வர வைத்துள்ளார்.
அதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவு பூஜைக்கு வர வைத்துள்ளார்.
மாணவி மர்ம மரணம்:
பிப்ரவரி 14ஆம் தேதி காலை கல்லூரி மாணவி மர்மமான முறையில் சாமியார் முனுசாமி வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய தந்தை ராமகிருஷ்ணன் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தன் மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பென்னலுர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி தலைமையில் ஒரு மாதமாக விசாரணை நடத்தி வந்தனர்.
சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு:
போலீசார் விசாரணையில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.மாணவியின் பெற்றோர்கள் அளித்த மனுவின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த மார்ச் 26-ஆம் தேதி நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதமாக மாணவி மர்மமாக இறந்த விவகாரத்தில் மாணவி குடும்பத்தினர், சாமியாரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் சாமியார் கல்லூரி மாணவி ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக பெற்றோரிடம் பொய் சொல்லியுள்ளார். மாணவியை அடிக்கடி கோவிலுக்கு வர வைத்து நள்ளிரவு பூஜைக்கு அழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை செய்தது தெரியவந்துள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் மாணவி கடந்த 13ஆம் தேதி சாமியார் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டியதால் கல்லூரி மாணவி விஷமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் 376 (ll)(n) 417, 306 இந்தியா தண்டனைச் சட்டப் பிரிவு 4 TNPWH சட்டம் 2002 என மாற்றம் செய்யப்பட்டு சாமியார் முனுசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .
மேலும் இவ் வழக்கின் புலன்விசாரணைதொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனது மகளுக்கு ஏற்பட்டது போல் மற்ற மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக யாரும் சொல்வதற்கு முன் வரவில்லை. சாமியார் என்ற போர்வையில் அவர் செய்யும் செயல்களை முழுமையாக விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்ற தந்தால் தான் தன் மகளுக்கு நீதி கிடைத்ததாக நம்புவோம். முதல்வர் தனது மகளுக்கு நீதி பெற்று தர முயற்சிக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.