திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் தேஜு என்ற இன்ஜினீயரிங் நிறுவனம் உள்ளது. பீகாரை சேர்ந்த குட்டுலு என்ற 29 வயது நபர், அசாம் மாநிலத்தை சேர்ந்த துவாரிகா என்ற இளைஞர் உட்பட பல வடமாநிலத்தவர்கள் தேஜு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் குட்டுலுவும், துவாரிகாவும் நண்பர்களாக பழகினர். துவாரிகா தனது மனைவி சுமிதா, 4 வயதான மகன் சிவா, ஒரு வயதான மகள் ரீமா ஆகியோருடன் நிறுவனத்தின் அருகிலேயே ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துவாரிகாவின் மனைவி சுமிதாவுக்கும், குட்டுலுவுக்கும் திடீரென கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. . இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவில் குட்டுலுவை சந்திக்க தனது இரு குழந்தைகளுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் சுமிதா. அங்கு இருவரும் தனிமையில் இருந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குட்டு, குழந்தைகள் சிவா, ரீமா ஆகியோரின் வாயில் பிளாஸ்டிக் டேப்பை ஒட்டி, அவர்களின் தலையை தரையில் மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும், இதை தடுக்க முயன்ற தாய் சுமிதாவின் தலையில் அரிவாளால் வெட்டி, கழுத்தை நெரித்துள்ளார் குட்டுலு. இதில் சுமிதா மயங்கி விழுந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக நினைத்த குட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தகவலறிந்த சோழவரம் போலீசார் குழந்தைகள் 2 பேரின் உடல்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மயங்கி கிடந்த சுமிதாவுக்கு பாடியநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு குழந்தைளை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் குட்டுவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பீகார் செல்லும் ரயில்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறால் ஒரு வயது பிஞ்சு குழந்தை உட்பட 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பலரையும் பதைபதைக்க செய்கிறது.
செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child murdered, Crime News, Double Murdered, Illegal affair, Thiruvallur