ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

அதிமுக கல்வெட்டு சின்னத்தை அகற்றி பாஜக சின்னம் அமைப்பு.. திருவள்ளூரில் பரபரப்பு!

அதிமுக கல்வெட்டு சின்னத்தை அகற்றி பாஜக சின்னம் அமைப்பு.. திருவள்ளூரில் பரபரப்பு!

அதிமுக - பாஜக சின்னம்

அதிமுக - பாஜக சின்னம்

Thiruvallur news | திருவள்ளூரில் அதிமுக கல்வெட்டு சின்னத்தை அகற்றிவிட்டு பாஜகவின்  தாமரை சின்னம்  வைத்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவாக இருந்தவர் அருண் சுப்பிரமணியன். எம்.எல்.ஏவாக இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் அருண் சுப்பிரமணியன். அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதமே பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் மணவாளன் நகர் மேம்பாலம் அருகே அதிமுகவில் இணைந்தபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் அப்போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியை ஏற்றி கல்வெட்டு வைத்திருந்தார்.

தற்போது பாஜகவில் இருப்பதால், அந்த கல்வெட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை  வைத்தார். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: ADMK, BJP, Local News, Thiruvallur