ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

மகனுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்.. துரத்திய போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு..!

மகனுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்.. துரத்திய போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு..!

மகனுடன் பெண் கவுன்சிலர்

மகனுடன் பெண் கவுன்சிலர்

Admk councillor kidnap issue | தகவல் அறிந்த போலீசார் கடத்தல் காரை விரட்டி சென்ற போது, கடத்தல்காரர்கள் இருவரையும் ரோட்டிலேயே இறக்கி விட்டு தப்பி சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Gummidipoondi

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் முதலாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரோஜா. இவர் நேற்று பல்லவாடா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ரோஜாவையும், அவரது மகன் ஜேக்கப்பையும் கத்தி முனையில் மிரட்டி, அவர்களது காரிலேயே கடத்திச் சென்றுள்ளனர். தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கடத்தப்பட்டவர்களை தேட 4 தனிப்படைகளையும் அமைத்து உத்தரவிட்டார். இதனிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் ரோஜா கடத்தப்பட்ட காரை சிலர் பார்த்துள்ளனர். அவர்களை ஆந்திர காவல்துறையினர் பின்தொடர்ந்த நிலையில், ரோஜாவையும், அவரது மகனையும் காளஹஸ்தி அருகே கீழே இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர்.

இருவரையும் மீட்ட இரு மாநில காவல்துறையினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இச்சம்பவத்தில் கவுன்சிலர் எதற்காக கடத்தப்பட்டார்?... அவர்களை கடத்தியது யார்?..உண்மையிலேயே கடத்தப்பட்டார்களா?, கார் எங்கே? என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: Crime News, Kidnap, Local News, Thiruvallur