முகப்பு /செய்தி /திருவள்ளூர் / தனியார் நிறுவன ஊழியர் கொலையில் பகீர் தகவல் - இளைஞர் கைது

தனியார் நிறுவன ஊழியர் கொலையில் பகீர் தகவல் - இளைஞர் கைது

கொலை செய்யப்பட்ட இளைஞர்

கொலை செய்யப்பட்ட இளைஞர்

திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் சோழவரம் காவல்நிலையத்தில் சக்திவேல் என்பவர் தனது மகன் பிரவீன் குமார் (வயது 25) காணவில்லை எனப் புகார் கொடுத்தார். சோழவரத்தில் உள்ள ஆச்சி மசாலா கம்பெனியில் சக்திவேல் வேலை பார்த்து வந்தநிலையில் மாயமானது தெரியவந்தது. பிரவீனின் சொந்த ஊர் சேலம் வேலைக்காக சோழவரம் வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி குடும்பத்தினரிடம் பிரவீன் குமார் பேசியுள்ளார். அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. பிரவீன் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன் பிரவீன் குமார் அவரது நண்பர் ராஜேந்திரனுடன் சேர்ந்து அவர் பணிபுரியும் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஜாபர் என்பவரிடம் தகராறு செய்துவிட்டது சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் நல்லூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள தாமரை குளத்தில் பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். பிரவீன் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. பிரவீன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இதனை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கடந்த 20-ம் தேதி லட்சுமி என்பவரின் டிபன் கடையில் பிரவீன்குமார், ராஜேந்திரன் இருவரும் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல்தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து லட்சுமி தனது மகன் நரேஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். நல்லூர் செல்லியம்மன் கோவில் பகுதியில் இருசக்கரவாகனத்தில் வந்த இருவரையும் மறித்த நரேஷ் ஏன் கடையில் சாப்பிட்டுவிட்டு தினமும் பிரச்னை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நரேஷ் கட்டையை கொண்டு பிரவீன் குமாரை துரத்தி சென்று தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலே பிரவீன் குமார் இறந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நரேஷை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Murder, Thiruvallur