முகப்பு /செய்தி /திருவள்ளூர் / பெற்ற குழந்தையை கொன்று விட்டு தம்பதி தற்கொலை... திருவள்ளூரில் அதிர்ச்சி!

பெற்ற குழந்தையை கொன்று விட்டு தம்பதி தற்கொலை... திருவள்ளூரில் அதிர்ச்சி!

குடும்பத்துடன் தற்கொலை

குடும்பத்துடன் தற்கொலை

Thriuvallur family suicide | ஒரே குடும்பத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

திருவள்ளூர் அருகே 4 வயது குழந்தையை கொன்று விட்டு தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டு கிராமத்தை சேர்ந்த கலையரசன் மனைவி மற்றும் 4வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

4 வயது குழந்தை கட்டிலில் சடலமாகவும், தம்பதியினர் இருவரும் தூக்கிலிடப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: Crime News, Local News, Suicide, Thiruvallur