ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

கார் கண்ணாடியை துளைத்த தோட்டா.. துப்பாக்கி முனையில் நகைக்கடை வியாபாரிக்கு மிரட்டல் - திருவள்ளூரில் பயங்கரம்

கார் கண்ணாடியை துளைத்த தோட்டா.. துப்பாக்கி முனையில் நகைக்கடை வியாபாரிக்கு மிரட்டல் - திருவள்ளூரில் பயங்கரம்

திருவள்ளூர் கார்

திருவள்ளூர் கார்

நகை வியாபாரியின் காரை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

திருத்தணி அருகே நகை வியாபாரியின் காரை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே அம்மையார்குப்பம் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர் அம்மையார்குப்பம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் அனு ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க ஆபரணங்கள் கடைகள் நடத்தி வருகிறார்.

இவர் அவரது காரிலே சென்னைக்கு சென்று தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வழக்கம் போல், நேற்று காலை சென்னைக்கு சென்று இரவு 9 மணி அளவில் திருத்தணியில் இருந்து தனது காரில் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருத்தணி ஆர். கே. பேட்டை மாநில நெடுஞ்சாலை வேலன் கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் பின்பக்க கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு பார்த்தபோது ஹெல்மெட் அணிந்திருந்த இருவர் காரை பின் தொடர்வதை கண்டு அச்சமடைந்தார்.

பிறகு காரை வேகமாக இயக்கி சென்று ஆர்.கே.பேட்டை பஜாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கார் கண்ணாடியை உடைத்ததாக புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதல்.. பங்களா வீட்டில் குடித்தனம்.. பள்ளி மாணவியை கடத்தி சென்ற பைக் மெக்கானிக் கைது

அப்போது மீண்டும் அம்மையார் குப்பம் பகுதி அருகே சாலைக்கு இடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி காரை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனை கண்டு அச்சமடைந்த அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று வீடு சேர்ந்துள்ளார்.தொடர்ந்து மறுநாளும் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சசிகுமார், திருவள்ளூர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvallur