முகப்பு /செய்தி /திருவள்ளூர் / குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்து தந்தை, மகன் தற்கொலை.. திருத்தணியில் பரிதாபம்!

குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்து தந்தை, மகன் தற்கொலை.. திருத்தணியில் பரிதாபம்!

உயிரிழந்த தந்தை - மகன்

உயிரிழந்த தந்தை - மகன்

Tiruttani father son suicide | தாய் பிரிந்து சென்ற நிலையில் மகன் தற்கொலை செய்து கொண்டார். மகனின் நிலையை காணமுடியாத தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruttani (Thiruttani), India

திருத்தணி அருகே குடும்பத் தகராறு காரணமாக  பூச்சி மருந்து குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் பரசுராமன் (48 ) சந்திரா(40) தம்பதியினர். இவர்களுக்கு காமாட்சி என்ற மகளும், லோகேஷ் (19) என்ற மகனும் உள்ளனர். லோகேஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பரசுராமனுக்கும் அவரது மனைவி சந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரா கணவரிடம் கோபித்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த லோகேஷ் பல முறை அவரது தாயை நேரில் சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும், சந்திரா வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் மனமுடைந்த லோகேஷ் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் லோகேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என நினைத்த தந்தை மருத்துவரிடம் காட்டுவதற்காக எடுத்து சென்ற பூச்சி மருந்தை அவரும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பரசுராமனும், லோகேஷும் தனித்தனி அறையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

-----------------------------------------------------------------------------------------------

First published:

Tags: Crime News, Local News, Tamil News, Tiruttani Constituency