முகப்பு /செய்தி /திருவள்ளூர் / கள்ளக்காதல் விவகாரம் : தட்டிக்கேட்ட கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று நாடகமாடிய மனைவி கைது!

கள்ளக்காதல் விவகாரம் : தட்டிக்கேட்ட கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று நாடகமாடிய மனைவி கைது!

முதல் படம்: சீனிவாசன் - இரண்டாவது படம்:  யுவராஜ் மற்றும் காயத்ரி

முதல் படம்: சீனிவாசன் - இரண்டாவது படம்: யுவராஜ் மற்றும் காயத்ரி

Thiruthani Wife Kill Husband | கள்ளகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டிற்கு கள்ள காதலனை வர வைத்து கொலை செய்ய உதவியது விசாரணையில் அம்பலம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவியை கைது செய்து ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சுந்தரராஜபுரம் கிராமத்தில் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் யுவராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக ஆறுமுகம் ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையில் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது யுவராஜின் மனைவி காயத்ரி கள்ளக்காதல் சம்பவத்தில் கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர்களுடன் இணைந்து கொலை செய்தது போலீசார் உறுதி செய்த நிலையில் காயத்ரியின் செல்போனை ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் காயத்ரி திருத்தணி ஆகூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கள்ள தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் காயத்ரி திருமணம் ஆகுவதற்கு முன்பே சீனிவாசனுடன் காதலர்களாக இருந்தது தெரிய வந்தது.

சென்னையில் இருவரும் ஒரே மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பிரிவில் படித்து வந்தபோதே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அவரது காயத்ரியின் வீட்டிற்கு தெரிய வரவே அதே கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பையனான யுவராஜிக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையிலும் முன்னாள் காதலன் சீனிவாசனுடன் காயத்ரி கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதற்காக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக காயத்ரியும் ரத்த சார்ந்த பிரிவில் சீனிவாசனும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்காதல் தொடர்வதை அறிந்து காயத்ரியின் யுவராஜ் இனி மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லக் கூடாது என வீட்டில் இருக்கும்படி கூறியுள்ளார். இந்த தகவலை கள்ளகாதலன் சீனிவாசனிடம் காயத்ரி செல்போனில் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சீனிவாசன் அவர்களது நண்பர்களான திருத்தணி பெரியார் நகரைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் ஏமநாதன் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டு யுவராஜ் வீட்டில் இருக்கும் பொழுதே தகராறு செய்துள்ளனர்.

பின்னர் சீனிவாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் மூவரும் யுவராஜ் இடம் தகராறு செய்து காயத்ரி யுவராஜன் மார்பு மீது ஏறி அமர்ந்து கொண்டும் மற்ற இருவர் கை மற்றும் கால்களை பிடித்து கொள்ள யுவராஜை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் திருத்தணியில் இருந்த மணிகண்டன், ஏமநாதனையும் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்த காயத்ரியின் கள்ளக்காதல் சீனிவாசனை கைது செய்தனர்.

இந்த நிலையில் விஷம் குடித்ததாக கை அறுத்துக் கொண்டதாக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்த யுவராஜின் மனைவி காயத்ரியை இந்த சம்பவத்தில் ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvallur