ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

46 பேர் மீது வழக்கு பதிவு : திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

46 பேர் மீது வழக்கு பதிவு : திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Thiruthani Public Protest | 6  பேரை கோட்டாட்சியர் விசாரணைக்காக சம்மன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருத்தணியில் அடுத்த ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்த 46 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்டோர்  கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த பிரச்னையில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டது.

இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் ஆதிதிராவிடர் மக்களுக்கு நில அளவீடு செய்து கல் நட்டனர். இதனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அளவிடு கல்லை பிடுங்கி எரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் வீட்டுமனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் 6  பேரை கோட்டாட்சியர் விசாரணைக்காக சம்மன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ”வெளியே வா வெளியே வா" கோட்டாட்சியர் வெளியே வா என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து கோட்டாட்சியர் அசரத் பேகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

First published:

Tags: Local News, Thiruvallur