Home /News /tiruvallur /

பழங்குடி சமூகத்தைச் சார்ந்த திரவுபதிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

பழங்குடி சமூகத்தைச் சார்ந்த திரவுபதிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

திருமாவளவன்

திருமாவளவன்

அதிமுகவுக்கு பாஜக தலைமை கூடாது, பாஜக அரசுக்கு எதிராக இந்து இளைஞர்கள்தான் போராடுகின்றனர். இதன் மூலம் பாஜக அரசு இந்து மக்களுக்கு எதிரான அரசு என்பதை புரிந்து கொள்ளலாம் என திருவள்ளூரில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  திருவள்ளூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், " திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி தோக்கமூர் பகுதியில்  தலித் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம்  தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது இந்த அரசுக்கு களங்கம் விளைவிக்க கூடிய நிகழ்வாக இருக்கிறது. ஆகவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும். அந்தச் சர்ச்சைக்கு உரிய சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்றார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், ” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த திரவுபதி மர்முவை வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் எல்லாம் சமூகநீதி பேசுகிறீர்கள்? பழங்குடி பெண்மணிக்கு ஏன் வாக்களிக்கத் தயங்குகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

  இது வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான போட்டி. இது பாஜக அமைப்பின் கருத்துக்கு அல்லது கோட்பாட்டுக்கு எதிரான ஒரு போராட்டம்தான் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இருக்கிற போராட்டம். திரவுபதி முர்மு, யஸ்வந்த் சின்ஹா என்கிற இரண்டு தனிப்பட்ட வேட்பாளர்கள் இடையிலான போராட்டம் அல்ல.

  எனவே, எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிற யஸ்வந்த் சின்ஹா அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான ஒரு பிரதிநிதியாகவோ வேட்பாளராகவோ எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்துவோம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

  ஆதிதிராவிட பொதுமக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வீட்டு மனை நிலத்தை அளந்துவிட்ட சூழலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை அங்கு குடியேறவிடாமல் சிலர் தடுக்கிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள. வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களை தாக்கியிருக்கிறார்கள்.

  வெளிப்படையாக பட்டப்பகலில் 50 ஆண்டு, 60 ஆண்டுக்ள் ஆயுள் உள்ள புளிய மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபடுவது அரசுக்கு விடுத்த சவால். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆதிதிராவிட பொதுமக்கள் அங்கே வீடு கட்டி குடியேறுவதற்கு உரிய பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

  மேல்நல்லாத்தூர் அருகே கேட்டர்பில்லர் கம்பெனி நிறுவனம் அங்குள்ள குளத்தைச்சுற்றி வளைத்து வேலி அமைத்து இருக்கிறது. அந்த வேலியை அப்புறப்படுத்தி அல்லது சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த குளம் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு அதிலும் தலையிட வேண்டும்.

  டெல்லி காவல் துறை, அதாவது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை இரண்டு நாட்களுக்கு முன்பு முகமத் ஜுபைர் என்பவரை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிறது. அவர்கள் ஷர்மா பேசிய பேச்சை தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்தார் என்பதுதான் அதற்கு காரணம்.
  ஆனால், 2018ஆம் ஆண்டில், இந்துக்களை புண்படுத்தும் வகையில் பதிவு செய்தார் என்று ஒருவரின் படத்தை வைத்து அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு ஒடுக்குமுறை போக்காக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

  அதேபோல ராஜஸ்தானில் உதவிபுரிய கன்ஹையா லால் என்ற ஒரு இந்து, கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

  இரட்டைத் தலைமை, கூட்டுத்தலைமை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவுக்கு பாஜக தலைமை கூடாது. அது அதிமுகவுக்கும் நல்லதல்ல. வேலைவாய்ப்பின்மை குறித்து போராடுகிறவர்களை யாரும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது என்றார்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: BJP, Thirumavalavan

  அடுத்த செய்தி