திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் வீட்டில் அவரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது அவரை கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சாமி நாசர் டிஜே கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
பின்னர் கவரைபேட்டை அருகே உள்ள ARR ஃபிலிம் சிட்டியில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மூத்த மகள் கதிஜா ரக்மான் ரியாசுதீன் சேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு விழாவில் அங்கு இசை பயிலும் மாணவர்கள் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் நிகழ்ச்சிக்கு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்தது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது. அதனை அடுத்து அவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவரும் அவருடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னதாக முதல்வர் வருகையையொட்டி சாலைககளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடனடியாக சீரமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். முதல்வர் வருகையால் கவரப்பேட்டை சத்தியவேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.