Home /News /tiruvallur /

‘நானும் நீதிபதிதான்... தொலைச்சிப்புடுவேன்’ என போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய மின்வாரிய அதிகாரி

‘நானும் நீதிபதிதான்... தொலைச்சிப்புடுவேன்’ என போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய மின்வாரிய அதிகாரி

மிரட்டல் விடுத்த நபர் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

Thiruvallur district News: வரதட்சணை கொடுமை தொடர்பான நீதிமன்ற வழக்கை விசாரணை செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை, தான் ஒரு நீதிபதி என கூறி மிரட்டல் விடுத்த தாம்பரம் மின்வாரிய அதிகாரியை தனிப்படை போலீசார் ராணிப்பேட்டையில் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India
    அம்பத்தூரையடுத்த கள்ளிகுப்பத்தை சேர்ந்த கபிலரின் மகன் நெப்போலியன். இவர் மீது அவர் மனைவி மேனகா அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வரதட்சணை புகார் அளித்திருந்தார். அதில், நெப்போலியன் ஐ.ஏ.எஸ். (IAS) படிந்துள்ளதாக கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 100 பவுன் நகை ஒரு கார் வேண்டும் எனக் கேட்டு மிரட்டுவதாகவும் அந்த வரதட்சணை புகாரில் குறிப்பிட்டிருந்த அவர், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, நெப்போலியன் மனைவி  மேனகா அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதன் பேரில் கபிலர் அவரது மகன் நெப்போலியன் மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை புகார் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி கடந்த  5ஆம் தேதி ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

    அப்போது கபிலர் அந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே அத்து மீறி நுழைந்து, மகளிர் ஆய்வாளர் ஜோதிலட்சுமியை பார்த்து, ‘என் குடும்பத்தார் மீது நீ வழக்குப் பதிவு செய்யக்கூடாது. நான் யார் தெரியுமா? தொலைச்சிபுடுவேன். நானும் நீதிபதி தான். இ.பி-ல் விஜிலென்ஸில் இருக்கிறேன்” என்று கூறி காவல் ஆய்வாளரை  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    அவ்வாறு அவர் மிரட்டல் விடுத்தபோது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து மிரட்டியதால்  மகளிர் ஆய்வாளர் ஜோதிலட்சுமி உடனடியாக அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது வழக்குப் பதிவு செய்து  தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர்.

    இதற்கிடையில், ஆய்வாளர் ஜோதிலட்சுமியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கபிலர் , அவருக்கு 10,000 ரூபாய் கொடுப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தனது மகன் நெப்போலியனை விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கைது செய்யப்பட்ட கபிலர்


    இந்நிலையில், செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் ஐ.பி.எஸ். தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கபிலரின் செல்போன் எண்களை வைத்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வேலூரை அடுத்த ராணிப்பேட்டை நெமிலி சாலையில் உள்ள பானாவரம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் கபிலர் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

    Must Read : மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

    உடனே அங்கு சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து அம்பத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - கன்னியப்பன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Thiruvallur, Threatening

    அடுத்த செய்தி